அமெரிக்கா வடகொரியா பொருளாதார தடைகளை விதித்து வரும் நிலையில் தென்கொரியா - வடகொரியா அதிபர் சந்திப்பு நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா அதிபரும் அமெரிக்க அதிபரும் சந்தித்து பேசிய பின்னர் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அணு அயுதங்களை முழுமையாக கைவிடுவதற்கு அளித்த உறுதியை நிறைவேற்ற வடகொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இதற்கு இடையே வடகொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையை முழுமையாக நடைமுறைப்படுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட வேண்டும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் வடகொரியா - தென்கொரியா அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இவர் சந்திப்பு தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.