Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிச்சைக்காரரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண்

Advertiesment
பிச்சைக்காரரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண்
, வியாழன், 1 பிப்ரவரி 2018 (14:07 IST)
பணம் இல்லை என்றால் எதுவும் இல்லை  என்ற இன்றைய கால கட்டத்தில், நெதர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் பிச்சைக்காரரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெதர்லாந்தில் விக் கோகுலா என்ற பிச்சைக்கார இளைஞர், ரோட்டோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற எமி ஆப்ரஹாம்சன் என்ற பெண், விக்கை சந்தித்து பேசியுள்ளார்.
 
விக்கின் பேச்சில் மயங்கிய எமி, அவர் மீது காதல் மோகம் கொண்டுள்ளார். விக்கின் பிரவுன் நிற கண்களை பார்த்து மயங்கிய எமி, விக்கிடம் தனது மொபைல் எண்ணை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். சில நாட்களுக்கு பிறகு எமிக்கு போன் செய்த விக், எமியை நேரில் சந்திக்க வேண்டும் என கூறினார். பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
webdunia
விக் தற்பொழுது எலக்ட்ரிகல் இன்ஜினீயராக இருக்கிறார். விக் எமி தம்பதியினருக்கு தற்பொழுது குழந்தைகள் இருக்கின்றனர். எமி தங்கள் காதல் கதையை ஒரு புத்தகமாக எழுதியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மயிலுக்கு அனுமதி மறுத்த யுனைடட் ஏர்லைன்ஸ் அதிகாரிகள்....