Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை கடற்கரையில் இளம்பெண்ணின் சடலம்; போலீஸார் தீவிர விசாரணை

சென்னை கடற்கரையில் இளம்பெண்ணின் சடலம்; போலீஸார் தீவிர விசாரணை
, சனி, 30 டிசம்பர் 2017 (14:13 IST)
சென்னை கிழக்கு கடற்கரையில் இளம்பெண் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராமம் ஆலமரக்கோட்டை பகுதியில் உள்ள கடற்கரையில் இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்ததுள்ளார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணின் உடலிற்கு அருகில் பேக் இருந்துள்ளது. அதில் அடையாள அட்டை, பணம், மாத்திரை உள்ளிட பொருட்கள் இருந்துள்ளது. 
 
அடையாள அட்டையை வைத்து, அடையாள அட்டையில் உள்ள பெண்தான் இறந்ததா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் ஆண்களில் காலடி இருப்பதால் பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை பின்னரே எதுவாக இருந்தால் தெளிவாக கூற முடியும் என்பதால் காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இளம்பெண் சடலம் குடியிருப்பு பகுதிக்கு அருகில் இருந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள், இந்த பகுதியில் அடிக்கடி சினிமா சூட்டிங் நடக்கும். சினிமா சூட்டிங் வந்த இளம்பெண்ணிற்கு ஏதாவது நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. குடியிருப்பு பகுதி அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளதால், நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உருவாகிறது புதிய பேரவை : தினகரனின் அடுத்த மூவ்