Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகைகளை வைத்து பாலியல் வியாபாரம்: அமெரிக்காவில் சிக்கிய இந்திய தொழிலதிபர்

நடிகைகளை வைத்து பாலியல் வியாபாரம்: அமெரிக்காவில் சிக்கிய இந்திய தொழிலதிபர்
, வியாழன், 14 ஜூன் 2018 (23:26 IST)
தமிழ், தெலுங்கு நடிகைகளை வைத்து அமெரிக்காவில் பாலியல் தொழில் நடத்தி வந்த இந்திய தொழிலதிபர் ஒருவரையும் அவரது மனைவியையும் அமெரிக்க போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் தென்னிந்திய திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
அமெரிக்காவில் அதிக பிரபலம் இல்லாத தமிழ், மற்றும் தெலுங்கு நடிகைகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததாக மொடுகுமுடி கிஷான் என்பவர் அதிரடியாக அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொழிலதிபராக இருந்து, பின்னர் தெலுங்கு படங்களின் இணைதயாரிப்பாளராக மாறிய இவர் ஒருசில படங்களை தெலுங்கில் தயாரித்துள்ளார். இந்த நிலையில் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் அமெரிக்காவுக்கு வரும் தென்னிந்திய நடிகைகளை வைத்து பாலியல் தொழிலை இவர் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த பாலியல் தொழிலுக்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். பெரும்பாலும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் தான் இவர்களது ரெகுலர் கஸ்டமர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
webdunia
ஒரு நடிகைக்கு 3000 அமெரிக்க டாலர் வரை இவர் பணம் பெற்றதாகவும், இவரது பிடியில் இருந்த ஒரு நடிகை தப்பித்து காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது மொடுகுமுடி கிஷான் கைது செய்யப்பட்டதாகவும் அமெரிக்க போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்கள் மீதான குற்றம் உறுதிசெய்யப்பட்டால் அமெரிக்க சட்டப்படி கணவன், மனைவி இருவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக்கோப்பை கால்பந்து: முதல் போட்டியில் ரஷ்யா அபார வெற்றி