Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரான் - அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை!.. போர் நிறுத்தம் ஏற்படுமா?..

Advertiesment
donald
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் எப்போது நிற்கும் என்பதுதான் உலகமெங்கும் உள்ள மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.. ஏனெனில், போரால் பல பாதிப்புகளை எல்லா நாடுகளும் சந்தித்து வருகிறது. அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குவதாலும் உலகெங்கும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் அரசு முடி விட்டதாலும் உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது..

பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கிடைக்கவில்லை. கேஸ் தட்டுப்பாடு காரணமாக பல ஹோட்டல்கள் மூடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் கேஸ் சிலிண்டரை மட்டுமே நம்பி இருந்த ஹோட்டல்கள் மூடப்பட்டிருக்கிறது.. உணவு விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை மிரட்டியும், எச்சரித்தும் ஈரான் பயப்படவில்லை. நாங்கள் போருக்கு தயார் என்று ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது.

இந்த போரை எப்படியாவது முடித்து வைக்க வேண்டும் என களமிறங்கிய பாகிஸ்தான் அமெரிக்க ஈரானுக்கு இடையே பேச்சுவார்த்தை துவங்க காரணமாக இருந்தது. சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் ஈரான் அனுசக்தி உற்பத்தி செய்யக்கூடாது என்கிற அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்காததால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து ஈரானை தாக்கி அழிப்போம்.. ஹோர்மூஸ் ஜலசந்தியை நாங்கள் கைப்பற்றுவோம்.. ஈரானின் முக்கிய நகரங்களை நாங்கள் முற்றுகையிடுவோம் என்றெல்லாம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து சொல்லி வருகிறார் எனவே ஈரானில் மீண்டும் போர் மேகம் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில்தான், அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராகவிருப்பதாக இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபதாலி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் அமெரிக்கா ஈரான் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் நியாயமற்ற நிபந்தனைகளை அமெரிக்க முன்வைத்தது. இதனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.. அதேநேரம் நாங்கள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ஈரானின் இந்த முடிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார். அனேகமாக வருகிற வியாழக்கிழமை அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் ஓட்டை பிரிக்கும் கிங் மேக்கரா?.. இல்லை கேம் சேஞ்சரா?.. ஒரு அலசல்!..