ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் தலீபான்கள் அட்டூழியம் அதிகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலீபான்களை அடக்க கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா ராணுவம் உதவி வந்த நிலையில் தற்போது அமெரிக்க படைகள் முழுவதுமாக திரும்ப பெறப்பட்டுள்ளன, இதனால் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலீபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தலீபான் பயங்கரவாதிகள் சிறை பிடிக்கப்பட்ட பகுதிகளில் பத்திரிக்கையாளர்கள், மத பண்டிதர்கள், சமூக ஆர்வலர்கள் என 33 பேரை படுகொலை செய்துள்ளது தலீபான் கும்பல். மேலும் காவல் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரையும் தலீபான்கள் கடத்தி கொல்வதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.