Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷீர்டி பாபாவின் மகத்துவம்

ஷீர்டி பாபாவின் மகத்துவம்
, சனி, 24 ஜூலை 2021 (23:43 IST)
ஷீர்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைத்துள்ளது. இங்கு சாய் பாபா 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த குரு. இவரை இந்துக்களும்  இஸ்லாமியர்களும் புனித துறவியாக போற்றுகின்றனர்.
 
இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலம், அகமது நகர் மாவட்டம், ஷிர்டி யில் சாய்பாபா பிறந்தார். இவருடைய பிறப்பு பற்றி உண்மையான தகவல்கள்  கிடைக்காததால் அவருடைய பிறப்பு பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. ஆனால் அவர் இந்து சார்ந்த பெற்றோருக்கு பிறந்ததாகவும் பிறகு ஒரு முஸ்லீம்  குடும்பத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இவருடைய போதனைகள் மற்றும் தத்துவங்கள் எளிதில் புரிந்துகொள்ள முடிவதால் இவருடைய புகழ் இந்தியா  முழுவதும் பரவாத துவங்கியது.
 
ஷீர்டி பாபா கோவிலை பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்த வண்ணம் உள்ளனர். இங்கு நான்கு வேளை பூஜை நடக்கிறது. காலை 4,30 மணிக்கு காலை  ஆரத்தி, மதியம் 12.00 மணிக்கு மதிய ஆரத்தி, 6.30 மணிக்கு மாலை ஆரத்தி, இரவு 10.30 மணிக்கு இரவு ஆரத்தி நடக்கிறது. வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விமானம் அல்லது ரயில் மூலமாக ஷீர்டி பயணிக்கலாம்.
 
இருபதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட முதல் அவதார புருஷர் ஷிர்டி சாய்பாபா 1918 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள் இந்த  உலக வாழ்க்கையை விட்டு பிரிந்தார். இன்று அவர் சமாதியான இடம் தற்பொழுது பல்லாயிரக்கணக்கான மக்கள் வணங்கும் புண்ணிய தலமாக விளங்குகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விநாயகரை அர்ச்சனை செய்வதற்குரிய இலைகளைக் காண்போம்