Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிவி பெண் தொகுப்பாளர்கள் முகம் தெரிய கூடாது! – தாலிபான்கள் புதிய கட்டுப்பாடு!

Webdunia
திங்கள், 23 மே 2022 (12:30 IST)
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு புதிது புதிதாய் பல கட்டுப்பாடுகளை விதித்து வரும் தாலிபான்கள் தற்போது மேலும் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான் அமைப்பு மீண்டும் ஆட்சியை பிடித்தது. அதுமுதலாக ஆப்கானிஸ்தான் சட்டத்திட்டங்களில் தொடர்ந்து பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

முக்கியமாக பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள், கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. முன்னதாக பெண்கள் நடிக்கும் அழகு சாதன பொருட்களின் விளம்பரங்கள் உள்ளிட்டவற்றிற்கு தாலிபான் அமைப்பு தடை விதித்திருந்தது.

தற்போது டிவி சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றும் பெண்கள் முகம் முழுவதையும் மறைக்கும் வண்ணம் ஆடை அணிந்திருப்பது கட்டாயம் என அறிவித்துள்ளது. இந்த உத்தரவை பின்பற்றாத பெண் தொகுப்பாளர்களை பணி நீக்கம் செய்யும்படி செய்தி சேனல்களுக்கு ஆப்கன் ஒழுக்க நெறிகள் துறை உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments