ஆப்கானிஸ்தானின் 2வது பெரிய நகரான காந்தகார் தலிபான்கள் பிடியில்?

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (09:40 IST)
ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான காந்தகாரை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு வந்த அமெரிக்க ராணுவம் அங்கிருந்து சமீபத்தில் வெளியேறி வருகிறது. இம்மாத இறுதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறிவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது. 
 
அமெரிக்கப் படைகள் வெளியேறுவதைத் தொடர்ந்து நிலைமை அங்கு மிக மோசமாக மாறிவருகிறது. ஆம், அமெரிக்கப் படைகள் நாடு திரும்பியதை அடுத்து தலிபான்களின் தாக்குதல் அதிகமாகியுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரான காந்தகாரை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தலைநகர் காபுல் போன்ற முக்கிய நகரங்களையும் தலிபான்கள் நெருங்கிவருகிறார்கள் என தகவல் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments