Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷியா முஸ்லீம்களை கொல்லும் சன்னி முஸ்லீம்கள்!? லெபனானில் கலவரம்! - யார் காரணம் தெரியுமா?

Advertiesment
Shiya Sunny Clash

Prasanth Karthick

, ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (09:34 IST)

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் லெபனானில் உள்ள ஷியா - சன்னி முஸ்லீம்களிடையே ஏற்பட்டுள்ள கலவரம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில், இந்த போரில் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக லெபனான் எல்லையில் செயல்படும் ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தியது. இதனால் இப்போது இஸ்ரேலின் போர் வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது.

 

இதனால் லெபனான் மீது கடந்த சில நாட்களாக இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தரை வழி தாக்குதலுக்கும் தயாராகி வருகிறது. சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள் உள்ளிட்ட 100க்கும் அதிகமான லெபனான் மக்கள் உயிரிழந்தனர். 
 

 

லெபனான் எல்லையில் செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா அமைப்புக்கு ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் உதவி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் தற்போது இஸ்ரேல் லெபனானை தாக்க ஹெஸ்புல்லா அமைப்பும், ஷியா முஸ்லீம்களும்தான் காரணம் என கொதித்தெழுந்த சன்னி பிரிவு முஸ்லீம்கள் கலவரத்தில் இறங்கியுள்ளனர்.

 

இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் அவர்கள் ஷியா பிரிவு இஸ்லாமியர்களை கொலை செய்துள்ளனர். இதனால் இரு பிரிவினரிடையே பல பகுதிகளில் பெரும் மோதல் எழுந்துள்ள நிலையில் லெபனான் கலவர தேசமாக காட்சியளிக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?