Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு தந்தால்..? நேதன்யாகு எச்சரிக்கை! படைகளை அனுப்பிய அமெரிக்கா!

Labanon attack

Prasanth Karthick

, செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (09:01 IST)

இஸ்ரேல் - லெபனான் இடையே போர் மூண்டுள்ள நிலையில் லெபனான் மக்களை எச்சரித்து இஸ்ரேல் பிரதமர் வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 

இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பினரிடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில்,ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக லெபனான் எல்லையில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தியது.

 

இதில் வடக்கு இஸ்ரேல் பகுதியில் சிலர் பலியான நிலையில் இஸ்ரேல் பதிலடியாக லெபனான் எல்லைகளில் தாக்குதல்களை தொடங்கியுள்ளது. ஹிஸ்புல்லா பதுங்குத்தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக சொல்லி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட லெபனான் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
 

 

இந்நிலையில் லெபனான் மக்களுக்கு எச்சரிக்கை வீடியோ வெளியிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, ஹிஸ்புல்லா அமைப்பினரின் கேடயமாக பொதுமக்கள் பலியாக வேண்டாம் என்றும், ஹிஸ்புல்லா அமைப்பினர் தங்கள் ஆயுதங்களை பதுக்கி வைக்க லெபனான் மக்கள் உதவுவதால் அந்த ஆயுதங்கள் எங்கள் மக்களை கொல்கின்றன என்றும் பேசியுள்ளார்.

 

இஸ்ரேலின் லெபனான் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்கா தனது ராணுவத்தை மத்திய கிழக்கிற்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் பதற்றம் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் முதல்முறையாக 1-பி வகை குரங்கம்மை! கேரள நபர் மருத்துவமனையில் அனுமதி!