பூமியிலிருந்து விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் உட்பட இருவர் எப்போது பூமிக்கு திரும்புவார்கள் என்று தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த மாதம் ஐந்தாம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் விண்வெளி மையத்திற்கு சென்ற நிலையில் அவர்கள் ஜூன் 14ஆம் தேதியே திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் ஹீலியம் கசிவு மற்றும் சில தொழில்நுட்ப காரணங்களால் தற்போது ஒரு மாதத்தை கடந்த நிலையிலும் இன்னும் இருவரும் பூமிக்கு திரும்பவில்லை. இந்த நிலையில் விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் அனுப்பிய செய்தியில் இந்த விண்கலன் எங்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு செல்லும் என்று நான் மனதளவில் நம்புகிறேன். அதில் எந்தவித பிரச்சனையும் இருக்காது. தோல்வி என்பது ஆப்ஷன் அல்ல. அதனால் தான் நாங்கள் இங்கே தைரியமாக தங்கி உள்ளோம், நாங்கள் பூமிக்கு திரும்புவதற்கான பணிகள் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. விரைவில் திரும்புவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விண்வெளியில் சிக்கிய இருவரையும் மீட்டு வருவது குறித்து நாசா எந்தவித கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.