Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான் ராணுவம் மீது தற்கொலைப்படை தாக்குதல்! பலுச் விடுதலை படையால் அடுத்தடுத்து அதிர்ச்சி!

Advertiesment
BLA Attack

Prasanth Karthick

, திங்கள், 17 மார்ச் 2025 (11:09 IST)

சமீபத்தில் பாகிஸ்தான் ரயிலை கடத்திய பலுச் விடுதலை படையினர் தற்போது நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

 

பாகிஸ்தானின் ஒரு பகுதியாக உள்ள பலுசிஸ்தானை தனி நாடாக விடுதலை அளிக்க கோரி பலுச் விடுதலை படை என்ற அமைப்பு பல காலமாக பாகிஸ்தானின் பல பகுதிகளில் பயங்கரவாத சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் பயங்கரவாத குழுவாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு சமீபத்தில் 400 பேர் பயணித்த பாகிஸ்தான் ரயிலை கடத்தி பயணிகளை பணையக் கைதிகளாக பிடித்தனர்.

 

பாகிஸ்தான் ராணுவம் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி 33 பயங்கரவாதிகளை கொன்று மக்களை மீட்டனர். 

 

இந்நிலையில் தற்போது பலுச் விடுதலை படையினர் பாகிஸ்தான் ராணுவம் மீதே தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று காலை நோஷிகி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் ராணுவ வாகனங்கள் சென்றபோது உள்ளே புகுந்த பயங்கரவாதியின் வாகனம் ஒன்று வெடித்து சிதறியது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

 

இந்த தாக்குதல் வீடியோவை தங்களது சமூக வலைதளத்தில் ஷேர் செய்துள்ள பலுச் விடுதலை படை, அதன்மூலம் இந்த தாக்குதலை நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் நடப்பது மக்களுக்கான ஆட்சியா? மாஃபியாக்களுக்கான ஆட்சியா? எச். ராஜா