உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிக வரி விதித்ததன் காரணமாக, ஏற்கனவே பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ள நிலையில், இன்று பங்குச்சந்தை ரத்தக்களறி ஆகும் என்றும் Black Monday மீண்டும் நிகழ வாய்ப்பு இருப்பதாகவும் பங்குச்சந்தை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் பங்குச்சந்தை சரிந்ததால், அந்த தினத்தை 'Black Monday' என அழைக்கப்பட்டு வருகிறது. அதைப் போல் இன்றும் Black Monday ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அமெரிக்கா அதிபரின் கூடுதல் வரிவிதிப்பே இதற்குக் காரணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபரின் கூடுதல் வரி விதிப்பு அமெரிக்காவுக்கும், அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுக்கும் பலனளிக்கவில்லை என்றால், மிகப்பெரிய சரிவு பங்குச்சந்தையில் ஏற்படும் என்றும், இதனால் பொருளாதாரம் மோசமான நிலைக்குச் செல்ல வாய்ப்பு உள்ளது என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று பிளாக் மண்டே ஏற்படுமா அல்லது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தப்பிக்க முடியுமா என்பதை இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து கொள்ளலாம்.