இலங்கையில் அதிபருக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ள நிலையில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை அரசின் மெத்தனத்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் மக்கள் கடந்த சில காலமாக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று முதலாக ராஜபக்ச ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் எழுந்துள்ள நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் அதை மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் ஆளும் கட்சி எம்.பியை கொன்றதுடன், ராஜபக்ச உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கும் தீ வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முதலாக இலங்கையில் நடந்து வரும் கலவரத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 231 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை பிரதமரான மகிந்த ராஜபக்ச பதவி விலகியபோதும், அதிபர் கோத்தபயவை பதவி விலக கோரி போராட்டம் தொடர்ந்து வருகிறது.