Publish Date: Tue, 10 May 2022 (10:59 IST)
Updated Date: Tue, 10 May 2022 (11:01 IST)
அரசு பெண் பணியாளர்களுக்கு குழந்தை பிறந்து இறந்தாலும் மகப்பேறு விடுப்பு செல்லும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு துறைகளில் பணிபுரியும் பெண்கள் குழந்தை பெரும் சமயம் அவர்களுக்கு 365 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசு பெண் பணியாளர்களுக்கு குழந்தை பிறந்து பேறுகால விடுப்பு முடிவதற்கு முன்னரே இறந்துவிட்டால் விடுப்பு தொடருமா அல்லது நிறுத்தப்படுமா என்பது குறித்த குழப்பங்கள் எழுந்துள்ளது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு அரசு ”அரசு பெண் பணியாளர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும், சிறிது காலம் கழித்து இறந்தாலும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும்” என்று உறுதியாக தெரிவித்துள்ளது.