இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இலங்கையில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது
மொத்தமுள்ள 225 இடங்களில் 196 எம்பிகளை அந்நாட்டு மக்கள் இன்று வாக்குப்பதிவு மூலம் தேர்வு செய்ய உள்ளனர். மீதமுள்ள இடங்கள் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் அடிப்படையில் விகிதாசார முறையில் நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய தேர்தலில் ஒரு கோடியே 60 லட்சம் பேர் வாக்களிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது மகிந்தா ராஜபக்சே தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன, ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறிய சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய மூன்று கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன
கொரோனா வைரஸ் பாதிப்பு இலங்கையில் வெகுவாக குறைந்து விட்டாலும் சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் ஆகியவற்றை வாக்காளர்கள் கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது