இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதால் இந்தியர்கள் இலங்கை வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில் உலக அளவில் தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடத்தை அடைந்துள்ளது. தினசரி பாதிப்புகள் 4 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் மாநில அளவிலான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ளதால் முன்னதாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியர்கள் நுழைய தடை விதித்தன. அந்த வகையில் தற்போது அண்டை நாடான இலங்கையும் இந்தியர்கள் வருகைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.