இந்தியா, சீனா தவிர சர்வதேச நிதியத்திடமும் இலங்கை கடனுதவி கோரியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை அரசு கடந்த சில மாதங்களாக கரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அந்நிய செலவாணி இருப்பு இல்லாததால் அத்தியாவசியமான பொருட்களுக்கான பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு -16.3% ஆக உள்ளதால் அந்த நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது.
இந்நிலையில் பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கைக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 7,500 கோடி இந்தியா கடன் உதவி அளித்தது. அடுத்து சீனாவிடமும் 250 கோடி டாலர்கள் அதாவது 19,000 கோடி ரூபாயை கடனுதவியை இலங்கை கோரியுள்ளது.
இலங்கை கேட்ட தொகையை அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது. இந்தியா, சீனா தவிர சர்வதேச நிதியத்திடமும் இலங்கை கடனுதவி கோரியுள்ளது என்பது கூடுதல் தகவல்.