பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கைக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 7,500 கோடி இந்தியா கடன் உதவி அளித்துள்ளது.
இலங்கை அரசு கடந்த சில மாதங்களாக கரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அந்நிய செலவாணி இருப்பு இல்லாததால் பெட்ரோலிய இறக்குமதியில் பெரும் பிரச்சினை எழுந்துள்ளது. இதனால் பெட்ரோலிய பொருட்கள் விலை இலங்கையில் பல மடங்கு உயர்ந்துள்ளது.
பல இடங்களில் பெட்ரோல், டீசல் கிடைக்காததால் மக்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர். பல இடங்களில் அத்தியாவசியமான பொருட்களுக்கான பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு -16.3% ஆக உள்ளதால் அந்த நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது.
இந்நிலையில் பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கைக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 7,500 கோடி இந்தியா கடன் உதவி அளித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் தேவைக்காக கடனுதவி அளிக்கப்பட்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. கடந்த மாதம் இலங்கைக்கு இந்தியா ரூபாய் மதிப்பில் 3,750 கோடி கடனுதவி அளித்திருந்தது என்பது கூடுதல் தகவல்.