Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனாவால் பொருளாதார சிக்கல் – இந்தியாவிடம் 8600 கோடி ரூபாய் கடன் கேட்கும் நாடு!

Advertiesment
கொரோனாவால் பொருளாதார சிக்கல் – இந்தியாவிடம் 8600 கோடி ரூபாய் கடன் கேட்கும் நாடு!
, திங்கள், 25 மே 2020 (11:31 IST)
இலங்கை இந்தியாவிடம் 8630 கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஊர்டங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளிலும் கடுமையான பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க அரசுகள் கடன் வாங்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கை இந்தியாவிடம் 8,360 கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இலங்கை அதிபர், கோத்தபய ராஜபக்சேவுடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசிய போது இந்த கடன் விவகாரம் பேசப்பட்டதாகவும், அதற்கு மோடி உதவி செய்வதாக நம்பிக்கை அளித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த 8630 கோடி இல்லாமல் ஏற்கனவே இலங்கை 3,040 கோடி ரூபாய் கடன் வழங்கும்படி கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பொருளாதாரமே அதல பாதாளத்தில் உள்ள நிலையில் மாநிலங்கள் கேட்ட நிதியை அளிக்க முடியாமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கு கடன் உதவி செய்யுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி!