இலங்கை பௌத்த உற்சவத்தில் பங்கேற்ற எலும்பும் தோலுமாக நின்ற வயதான டிக்கிரி என்னும் யானை நேற்று மரணமடைந்தது.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெறும் பௌத்த உற்சவம் இலங்கையில் மிக முக்கியமானதொரு உற்சவமாக கருதப்படுகின்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்குப்பற்றுதலுடன் இந்த நிகழ்வு ஒவ்வொரு வருடமும் மிகவும் கோலாகலமான கொண்டாடப்பட்டு வருகின்றது.
குறிப்பாக புத்தரின் புனித சின்னங்கள் வீதி ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவது இந்த உற்சவத்தின் பிரதான நிகழ்வாக காணப்படுகின்றது. இந்த உற்சவத்தை அலங்கரிக்கும் வகையில் சிங்கள பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், அலங்கரிக்கப்பட்ட யானைகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெறுகின்றமை வழமையாகும்.
இந்நிலையில், இந்த ஆண்டு உற்சவத்தில் கலந்துக்கொண்ட டிக்கிரி என்ற பெயரை கொண்ட யானை குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பேசப்பட்டு வந்தது. ஆம், உடல்நலம் குன்றி, மெலிந்துபோன வயதான பெண் யானை ஒன்றை பௌத்த உற்சவத்தில் பங்கேற்க வைத்தது தொடர்பாக இது வைரலாகும்.
அதன் பின்னர் நேர்த்திக்கடன் செலுத்தவே உற்சவத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், இனிவரும் காலங்களில் அதை உற்சவங்களில் பங்கேற்க வைப்பதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் யானை உரிமையாளர் தரப்பில் கூறப்பட்டது.
தற்போது கடந்த வாரத்துடன் 70 வயதைக் கடந்த டிக்கரி வயது மூப்பு மற்றும் உடல்நிலை மோசமடைந்ததால் டிக்கிரி நேற்று உயிரிழந்தது.