திருவிழாவில் மக்களை வீசியெறிந்த யானைகள்! – இலங்கையில் சோகம்

செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (13:12 IST)
இலங்கையில் திருவிழா ஒன்றில் திடீரென மக்களை தூக்கி வீசி கொண்டு ஓடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கை தலைநகர் கொலம்போவில் புத்த மடாலயம் ஒன்றில் திருவிழா நடைபெற்றது. பல்வேறுவிதமான நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்ற வேளையில் சில யானைகளும் அலங்கரிக்கப்பட்டு வலம் வந்து கொண்டிருந்தன. அமைதியாக சென்று கொண்டிருந்த ஒரு யானை கூட்டத்தை கண்டு வெகுண்டது. கூட்டத்தில் உள்ள மக்களை தும்பிக்கையால் தூக்கி வீசயபடி அது ஓடியது. இதை கண்டு அலறிய பொதுமக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர்.

மக்கள் அலறிக்கொண்டு ஓடி வருவதை கண்ட மற்றொரு யானையும் பயத்தில் பிளிறிக்கொண்டு எதிர்பட்டவர்களை மிதித்து கொண்டு ஓடியது. யானைகளால் 17 பேர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Courtesy : metro.co.uk

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் விக்ரம் லேண்டரின் ஆயுசு இன்னும் 11 நாட்கள்தான்... அதற்குள் சிக்னல் வருமா?