அண்டை நாடாக இலங்கையில் அன்னியச் செலாவணி பற்றாக்குறை உள்ளிட்ட காரங்களால் அ ந் நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
இதனால் அத்திவாசியப் பொருட்களின் விலை மற்றும், எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதிபர் கோத்தபய ராஜபக்ஷே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷே பதவியை விட்டு விலக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் பதவி விலக மறுத்துள்ளனர்.
இந்தியவிடம் பல ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ள நிலையில், சீனாவிடமும் இலங்கை கடனுதவி கேட்டுள்ளது. பொருளாதார சரிவில் இருந்து மீட்கும் வகையில், புதிய அறிவிப்பு ஒன்றைய அரசு வெளியிட்டுள்ளது. அதில், இலங்கையில் 1 லட்சம் அமெரிக்க டாலர் முதலீடு செய்தால் கோல்டன் விசா திட்டத்தில் 10 ஆண்டுகள் இங்கு தங்கி தொழில் செய்யலாம் எனவும் ,75 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புக்கு அடுக்குமாடி கட்டிடம் வாங்கினால் 5 ஆண்டுகள் கோல்டன் விசா என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.