மரண படுக்கையில் கிம்? மறுக்கும் தென் கொரியா!!

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (12:35 IST)
வட கொரிய அதிபர் கிம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான தகவலை தென் கொரியா மறுத்துள்ளது. 
 
அணு ஆயுத சோதனை, அமெரிக்காவுடன் மோதல் என பரபரப்பு கூட்டி வந்தவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். தற்போது உலக நாடுகளை கொரோனா மிரட்டி வந்தாலும், எல்லைகளை முன்கூட்டியே மூடி அதை விரட்டியவர் கிம். ஆம், வடகொரியாவில் ஒரு கொரோனா பாதிப்பும் இதுவரை இல்லை.  
 
இந்நிலையில், கிம் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் செய்துக்கொண்ட அறுவை சிகிச்சை ஒன்றுக்குப் பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக உளவுத்துறையை கண்காணிக்கும் அமெரிக்காவின் உயரதிகாரி தகவல் வெளியிட்டுள்ளதாக பிரபல ஆங்கில தொலைக்காட்சி நிறுவம ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  
 
கடைசியாக ஏப்ரல் 11 ஆம் தேதி தான் அவர ஊடகத்திற்கு முன் காணப்பட்டார் எனவும் கூறப்படுகிறது. ஏப்ரல் 12 அவருக்கு அறுவை சிகிச்சை நடந்திருக்க கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த செய்தியை வட கொரியாவின் முன்னாள் சிஐஏ துணை பிரிவு தலைவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து கிம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான தகவலை தென் கொரியா மறுத்துள்ளது. மேலும் இது போல எந்த விஷயமும் வடகொரியாவில் தென்படவில்லை என தென்கொரியா கூறியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments