காவலரை கடித்த கஞ்சா வியாபாரி! – குமரியில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (12:22 IST)
கன்னியாக்குமரியில் சாலையில் சோதனை பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர்களை கஞ்சா வியாபாரி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் காவலர்கள் மக்கள் அவசியமின்று சாலைகளில் நடமாடுவதை தவிர்க்க பல்வேறு இடங்களிலும் காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கன்னியாக்குமரி அருகே ஆசாரிப்பள்ளத்தில் காவலர்கள் இருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சமயம், அங்கு அஜித் என்னும் கஞ்சா வியாபாரி நடமாடி கொண்டிருந்திருக்கிறார். அவரை அவர்கள் விசாரிக்க தொடங்கியபோது திடீரென அஜித் தாக்கியுள்ளார். வீரமணி என்ற காவலரை கத்தியால் குத்தி விட்டு தப்ப முயன்றபோது, சிவாஜி என்ற காவலர் அஜித்தை பிடிக்க முயற்சித்துள்ளார். ஆனால் அவரை கடித்து விட்டு தப்பி செல்ல முயன்றுள்ளார் அஜித். பிறகு அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரால் தாக்குதலுக்கு உள்ளான காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments