தென் கொரியாவில் 38 வருடங்களுக்கு முன்னர் அரசுக்கெதிராக நடந்த போராட்டத்தை ஒடுக்குவதற்கு அனுப்பப்பட்ட ராணுவ வீரர்கள் அங்கிருந்த பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது.
1980 ஆம் ஆண்டு குவாங்ஜு நகரத்தை சேர்ந்த அப்பாவி பெண்களின் மீது ராணுவத்தினர் தொடுத்த விவரிக்க முடியாத வலி நிறைந்த தாக்குதலுக்கு மன்னிப்பு கோருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த விசாரணையின் மூலம் இளம்பெண்கள் மற்றும் ஒரு கர்ப்பிணி உள்பட 17 பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல்ரீதியான தாக்குதல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெறும் மன்னிப்பு மட்டும் போதாது என்று பாதிக்கப்பட்டவர்களில் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பதை தவிர்த்து மில்லியன் மன்னிப்பு கோரினாலும் அதற்கு பலனில்லை என்று பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் ஒருவரான கிம் சன்-ஓக் கூறுகிறார்.