Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சைத்தான் குழந்தையை தத்தெடுத்த சமூக ஆர்வலர்!!

சைத்தான் குழந்தையை தத்தெடுத்த சமூக ஆர்வலர்!!
, ஞாயிறு, 5 பிப்ரவரி 2017 (10:19 IST)
நைஜிரியாவில் சாத்தான் குழந்தை என கைவிடப்பட்ட குழந்தை இன்று உலகையே திருப்பி பார்க்க வைக்கும் சத்தான குழந்தையாக மாறி உள்ளார் சமூக ஆர்வலர் ஒருவர்.


 
 
நைஜிரியாவைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை ஹோப்.  வறுமையின் காரணமாக சாத்தானின் சந்ததி எனக் கூறி பெற்றோரால் கைவிடப்பட்டார் ஹோப். அந்த சிறுவனை டென்மார்க் சமூக ஆர்வலர் ஒருவர் மீட்டார்.
 
சிறுவனை அங்கிருந்து மீட்ட டென்மார்க சமூக ஆர்வலை அவனை மருத்துவமனையில் போதிய சிகிச்சைகள் அளிக்க உதவி புரிந்தார். இதை லோவன் தன்னுடைய சமூகவலைத்தில் பதிவேற்றம் செய்தார். ஹோப்பை சமூகவலைத்தளங்களில் கண்ட அனைவரும் மிகவும் அனுதாபப்பட்டனர். 
 
இதனால் ஹோப்பிற்கு உதவுவதற்காக உலகம் முழுவதிலும் இருந்து உதவிக்கு பணம் அனுப்பப்பட்டன. இந்த வகையில் ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதி சேர்ந்தது. 
 
பின்னர், லோவன் குழந்தைகளின் தொண்டு நிறுவனமான ஆப்பிரிக்க குழந்தைகள் உதவி கல்வி மற்றும் அபிவிருத்தி மன்றத்தில் சேர்த்து விட்டார்.
 
தற்போது ஹோப் நல்ல உடல் தகுதி பெற்று பள்ளிக்கு சென்று விட்டான் என்று கூறி புகைப்படத்தை லோவன் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவை சுழற்றி அடிக்கும் சிலர்: கட்சியும், ஆட்சியும் என்னவாகும்?