Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடியிருப்பில் விழுந்த விமானம்.. 15 வீடுகள் சேதம்.. உயிரிழப்பு அதிகம் என அச்சம்..!

Advertiesment
விமான விபத்து

Siva

, வெள்ளி, 23 மே 2025 (07:13 IST)
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி, குடியிருப்பு பகுதியில் விழுந்ததை அடுத்து, 15 வீடுகள் சேதம் அடைந்ததாகவும், இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் கடும் பனிமூட்டம் காரணமாக, சிறிய விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதிக்கு மேல் விழுந்துள்ளது. விமானத்தில் இருந்தவர்கள் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும், அதேபோல் வீட்டில் இருந்த சிலரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
 
அங்குள்ள 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. பல கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளன என்பதும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விபத்து நடந்த இடம் தற்போது புகைமூட்டமாக காணப்படுகின்றது. தீ வேகமாக பரவுவதால், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பவர்கள் அவசரமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருவதாக கூறப்படுகிறது.
 
தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த சம்பவம், அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!