Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இஸ்ரேல் தூதர்க அதிகாரிகள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை! யார் காரணம்? - அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

Advertiesment
Israeli murder in US

Prasanth Karthick

, வியாழன், 22 மே 2025 (10:59 IST)

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் வைத்து இரண்டு இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த சில ஆண்டுகளாக போர் நடந்து வரும் நிலையில், இதில் அமெரிக்கா தலையிட்டு போர் நிறுத்த தீர்வு காண முயன்று வந்தது. ஆனால் தற்போது இஸ்ரேல் மீண்டும் காசாவை தாக்கி வருகிறது.

 

இந்நிலையில் நேற்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள யூத அருங்காட்சியகம் அருகே வைத்து 2 இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கில் எலியாஸ் ரொட்ரிகஸ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் பாலஸ்தீன விடுதலை முழக்கங்களை எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட அதிகாரிகள் பெயர் வெளியிடப்படவில்லை. ஆனால் இது ஒரு திட்டமிட்ட யூத எதிர்ப்பினால் நடத்தப்பட்ட கொலைகள் என அதிபர் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹவுஸ் ஓனர் பெண்ணின் விரலை கடித்து துப்பிய வாடகைக்கு இருந்தவர்.. அதிர்ச்சி காரணம்..!