Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீக்கியர்கள் மீது குறிவைத்து தாக்குதல்; மர்ம நபர்கள் கைவரிசை! – அமெரிக்காவில் பரபரப்பு!

Sikhs
, புதன், 13 ஏப்ரல் 2022 (10:43 IST)
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் சீக்கியர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ரிச்மண்ட் ஹில் பகுதியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த இரண்டு சீக்கியர்களை வழிமறித்த மர்ம நபரகள் அவர்களை மூர்க்கமாக தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர். அவர்களது உடமைகளை பறிப்பதற்காக ஆசாமிகள் அவ்வாறு செய்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதே ரிச்மண்ட் ஹில் பகுதியில் 10 நாட்களுக்கு முன்னர் நிர்மல் சிங் என்ற சீக்கியர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து பேசியுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த நியூயார்க் நியூயார்க் சட்டமன்ற உறுப்பினரான ஜெனிபர் ராஜ்குமார் “சமீப காலமாக சில ஆண்டுகளாக சீக்கிய சமூகத்திற்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் 200% அபாயகரமாக அதிகரித்துள்ளது. எனது சீக்கிய அமெரிக்க குடும்பத்திற்கு எதிரான இரண்டு சம்பவங்களும் வெறுப்புக் குற்றங்களாக விசாரிக்கப்பட வேண்டும்.குற்றவாளிகள் சட்டத்தின் முழு அளவில் தண்டிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலாகலமாக தொடங்கிய தஞ்சாவூர் சித்திரை தேரோட்டம்! – குவிந்த பக்தர்கள்!