Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்காவில் சோழர் காலத்து சிலைகள்! – மீட்டு வந்த இந்தியா!

அமெரிக்காவில் சோழர் காலத்து சிலைகள்! – மீட்டு வந்த இந்தியா!
, வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (13:06 IST)
அமெரிக்காவில் பல்கலைகழகம் ஒன்றில் இருந்த கடத்தப்பட்ட சோழர் கால சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் புராதாணமாக சிலைகள் பல வெளிநாட்டுகளுக்கு கடத்தப்பட்டன. இந்த சிலைகளை கடத்துவதற்கு பல்வேறு கும்பல்கள் இருந்த நிலையில் அதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவன் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர். தற்சமயம் பல்வேறு நாடுகளில் உள்ள கடத்தப்பட்ட இந்தியாவின் சிலைகள் மீட்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் ஏல் பல்கலைகழகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இந்தியாவிலிருந்து கடத்தி சென்று வைக்கப்பட்ட சோழர்கள் கால சிலைகளை இந்தியா மீட்டுள்ளது. சோழர் காலத்து நடனமாடும் சம்பந்தர் சிலை உட்பட 13 சிலைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இவை சுபாஷ் கபூரால் கடத்தப்பட்டவையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகை! – நிதியமைச்சரிடம் முதல்வர் வலியுறுத்தல்!