போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு: அமெரிக்காவில் பரபரப்பு !

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (21:31 IST)
அமெரிக்க நாட்டில் உள்ள நியூஜெர்சியில் உள்ள நெவார்க் என்ற பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 போலீஸார் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.  இங்கு அடிப்படி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து வருவது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள  நியூஜெர்சியில் உள்ள  நெவார்க் என்ற பகுதியில் ஒரு கட்டிடத்தில் இருந்து ஒரு  நபர் துப்பாக்கியால் சுட்டதால் பொதுமக்கள் பயந்து ஓடினர்.

இதுகுறித்து, தகவல் அறிந்து, சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த  போலீஸார், விசாரணை செய்து கொண்டிருந்தபோது, அவர்கள் மீதும் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டார்.

இதில், காயமடைந்த 2 போலீஸாரை  மக்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த திடீர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீஸார் தேடி வருகின்றனனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து,  நியூஜெர்சி கவர்னர், மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments