ஈரானில் ஹிஜாப் போராட்டத்தால் உயிரிழந்த இளம்பெண் மாஹ்சாவின் 40 வது நாள் நினைவு ஊர்வலம் நடந்தது. இதில், 8 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.
ஈரான் நாட்டில் வசிக்கும் பெண்கள் 7 வயதிற்கு மேல் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில், 22 வயது பெண் மாசா அமினி ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்டார்.
அவர் மீது போலீஸார் கடுமையாகத் தாக்கினர். இதில் அவர் கோமா நிலைக்குச் சென்ற நிலையில் கடந்த 17 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, ஈரானில் அரசுக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இப்போராட்டத்தில் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதலில் ஏற்கனவே நூற்றுக்கணக்கானோர் மேல் பலியாகியுள்ளதாக தகவல் வெளியானது.
ஹிஜாப்பிற்கு எதிரக நாடு முழுவதும் பல மாகாணங்களில் பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், ஹிஜாப்பை எரித்தும் தலைமுடியை வெட்டியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஹிஜாப் போராட்டத்தில் உயிரிழந்த மஷா அமினி இறந்து 40 நாள் ஆகும் நிலையில், இன்று அவர் வசித்த பகுதியில் மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர்.
அப்போது, அவர்கள் போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர், இதில், 8 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.
இதற்கு அந்த நாட்டின் மனித உரிமைகள் அமைப்பு கடும் கண்டம் தெரிவித்துள்ளது, எனவே இப்போராட்டம் மேலும் தீவிரமடையும் என தெரிகிறது.