Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசின் மெத்தனப்போக்கால் எரிவாயு கிடங்கில் தீ விபத்து - 18 பேர் உடல் கருகி பலி

அரசின் மெத்தனப்போக்கால் எரிவாயு கிடங்கில் தீ விபத்து - 18 பேர் உடல் கருகி பலி
, செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (11:27 IST)
நைஜீரியாவில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 18 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியா லபியாவில் உள்ள ஒரு எரிவாயு சேமிப்பு கிடங்கில் நேற்று மாலை திடீரென பயங்கர வெடி சத்தம் எழும்பியது. இதனைத்தொடர்ந்து பயங்கரமாக தீ விபத்தும் ஏற்பட்டது. 
 
நிலைமையை சுதாரிப்பதற்குள்ளேயே அப்பகுதியில் இருந்தவர்கள் மீதும் அவ்வழியாக சென்றவர்கள் மீது தீ பரவியது இதில் 18 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும், பலர்  தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை கவலைகிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
சேமிப்புக் கிடங்குகளை ஒழுங்கப்படுத்த அரசு முன்வராத காரணத்தாலேயே  இந்த விபத்து நடந்திருப்பதாக என கூறப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவை குறிவைக்கும் ஆணைய அறிக்கை : எடப்பாடி பக்கா பிளான் ; அதிர்ச்சியில் தினகரன்