Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூக்கில் மாட்டிய கடல்மீன்: எப்படி மாட்டியிருக்கும் என குழப்பம்?

மூக்கில் மாட்டிய கடல்மீன்: எப்படி மாட்டியிருக்கும் என குழப்பம்?
, ஞாயிறு, 9 டிசம்பர் 2018 (12:34 IST)
அழிவின் விளிம்பில் இருக்கும் ஹாவாயன் மான்க் சீல் என்று அழைக்கப்படும் நீர்நாயின் மூக்கில் பாம்பு போன்ற கடல் மீன் எப்படி வந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் யோசித்து வருகின்றனர்.
 
அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் இந்த சிறுவயது நீர்நாயின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. இந்த வகை நீர்நாயை 40 வருடங்களாக அறிவியலாளர்கள் கண்காணித்து வருகின்றனர். 
 
ஆனால் இம்மாதிரியான சூழ்நிலையை 2016 ஆண்டிலிருந்துதான் அவர்கள் காண நேர்கிறது. அனைத்து நீர்நாய்களும் பிடிப்பட்டு, மாட்டிக் கொண்ட மீன்கள் அகற்றப்பட்டுவிட்டன.
 
இதற்கு ஆய்வாளர்கள் இரண்டு வகையான காரணங்களை சொல்கின்றனர். இந்த ஹாவாயன் மான்க் சீல்கள் உணவுக்காக, பவளப்பாறைகளையோ, மணலையோ, பாறையையோ தன் வாயையோ மூக்கையோ வைத்து முட்டும்போது இந்த பாம்பு போன்ற மீன் அதன் மூக்கில் மாட்டிருக்கலாம்.
 
அல்லது அந்த மீனுக்கு தப்பி செல்ல வழி இல்லாமல் அது சிக்கியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்நாய்கள் தனது உணவை கண்டுபிடித்தவுடன் அது பேரார்வத்துடன் தனது உணவை அங்கும் இங்கும் தூக்கியெறியும் பழக்கத்தையும் கொண்டவை.
 
இருப்பினும் காரணம் எது என்று தெளிவாகவில்லை. எனவே அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம், எதிர்காலத்தில் இம்மாதிரியான சூழ்நிலைகளில் நீர்நாய்களிடம் மாட்டிக் கொள்ளும் இந்த மீன்களை பிரித்து எடுப்பது எப்படி என்ற வரைமுறைகளை வகுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அ.தி.மு.க.வில் இணைந்தார் கஞ்சா கருப்பு