எகிப்தில் மக்கள் வாழும் பகுதிகளில் புகுந்து தேள்கள் கடித்ததால் 500 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாலைவன தேசமான எகிப்தில் கடந்த சில நாட்களாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. அஸ்வான் மாகாணத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால் வீடுகள், வாகனங்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன. இந்நிலையில் அங்கு மறைவிடத்தில் வசித்து வந்த தேள்கள் மக்கள் நடமாடும் பகுதிகளில் சாவகாசமாக உலா வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த தேள்கள் கடித்ததால் 500க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தேள் கடியால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அஸ்வான் மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.