Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாடகை தாய்க்கு பதில் குழந்தை பெற்று கொடுக்கும் ரோபோ.. சீன விஞ்ஞானிகளின் அபூர்வ கண்டுபிடிப்பு..!

Advertiesment
செயற்கை கருப்பை

Siva

, ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2025 (14:26 IST)
குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு வாடகைத் தாய் முறை ஒரு வரமாக இருக்கும் நிலையில், அதற்கு மாற்றாக செயற்கை கருப்பை சுமக்கும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழில்நுட்பம், எதிர்காலத்தில் மனித குழந்தைகளைப் பெற்றெடுக்கும் முறையை முற்றிலும் மாற்றியமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தக் கர்ப்ப கால ரோபோக்களில் செயற்கை கருப்பை பொருத்தப்பட்டு, ஒரு குழாய் மூலம் கருவிற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் செலுத்தப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், மனித தலையீடு இல்லாமல் கருவின் வளர்ச்சி கண்காணிக்கப்படும். இந்த முயற்சி, குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகளுக்கு ஒரு புதிய வழியை திறக்கும் என நம்பப்படுகிறது.
 
இருப்பினும், இந்த தொழில்நுட்பம் பல நெறிமுறை சார்ந்த கேள்விகளை எழுப்பியுள்ளது. மனித இனப்பெருக்கத்தை ஒரு இயந்திரத்தின் மூலம் நடத்துவது சரியானதா என்பது போன்ற விவாதங்கள் உலக அளவில் எழுந்துள்ளன. இந்த தொழில்நுட்பம் குறித்த தொடர் ஆய்வுகள் மற்றும் கடுமையான நெறிமுறை கட்டுப்பாடுகளுக்குப் பின்னரே, பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைவர் பதவியை இழக்கும் அன்புமணி! பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் வைத்த ட்விஸ்ட்!