கொரோனா வைரஸ்.உலகில் பெரும் உயிரிழப்புகளையும் மோசமான பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் வரை அங்குள்ள பள்ளிகள் திறக்கப்படாது என அந்நாட்டு அரசுகள் தெரிவித்துள்ளது.
அதேநேரம் பிலிப்பைன்ஸில் உள்ள பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி மூலம் ஆகஸ்ட் மாதம் முதல் வகுப்புகள் நடத்தப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இணையவழி வசதி இல்லாத பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு வழங்க ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.