பிரபல எகிப்து நாட்டு பாப் பாடகி சமீபத்தில் ஒரு மியூசிக் வீடியோவை வெளியிட்டிருந்தார். ஒரு வகுப்பறையில் நடப்பது போன்று அமைக்கப்பட்டிருந்த இந்த மியூசிக் வீடியோவில் பாப் பாடகி ஷ்யாமா அகமதுவும் அவரது குழுவினர்களும் நடனம் ஆடினர்.
இந்த நிலையில் இந்த மியூசிக் வீடியோவில் ஒரு காட்சியாக ஷ்யாமா வாழைப்பழம் ஒன்றை சாப்பிடுவது போன்ற காட்சி வருகிறது. ஐந்து ஆண்களுக்கு இடையில் நின்று கொண்டு அவர் வாழைப்பழம் சாப்பிடுவதும், அப்போது ஒலிக்கும் பாடலின் வரியும் ஆபாசத்தை தூண்டுவதாக பலர் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த எகிப்து போலீசார் தானாகவே முன்வந்து வழக்கு தொடர்ந்து பாடகி ஷ்யாமாவை கைது செய்தனர். இதுகுறித்து பாடகி ஷ்யாமா தனது சமூக வலைத்தளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். தனது செயல் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்