சவூதி அரேபியாவின் தெற்கு மாகாணமான அசிரியில் மெக்காவுக்கு சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது. இதில், 20 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகிறது.
சவூதி அரேபியாவில் முகமது பின் சல்மான் அல் சவுத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
இங்குள்ள ஆசிரில் என்ற பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இஸ்லாமிய பக்தர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மெக்கா என்ற புனித பயணத்திற்கு ஒரு பேருந்தில் சென்றனர்.
அப்போது, ஒரு பாலத்தில் சென்றபோது, பேருந்து, ஓட்டுனரில் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
உடனே பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், பேருந்தில் சென்ற 20 பேர் உயிரிழந்தனர்.
மீதமுள்ள 29 பேர் படுகாயமடைந்த நிலையில், அருகிலுள்ளோர் அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் பலியான 20 பேரும் வெளிநாட்டைச் சேர்ந்த பயணிகள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.