ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் முக்கிய பாதுகாப்புப்படை தலைவர் குண்டு வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், ரஷ்யாவின் ரசாயன, கதிர்வீச்சு பாதுகாப்பு படைகளுக்கு தலைமை தாங்கி வருகிறார் இகோர் க்ரில்லோவ். இவர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது கட்டடத்தின் வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர் வெடித்து சிதறியதில் பலியானார். அவரது உதவியாளரும் உடன் பலியானார்.
இதை ரஷ்ய துப்புரவு அமைப்பு உறுதி செய்துள்ள நிலையில் குண்டு வெடிப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தடைசெய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை உக்ரைன் மீது கிரில்லோவ் பயன்படுத்தியதாக ஏற்கனவே அவர் மீது உக்ரைன் குற்றம் சாட்டி வந்தது.
இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு கொலை சம்பவம் நடந்துள்ளதால் இதற்கு உக்ரைனின் உளவு அமைப்புகள் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து உக்ரைன் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K