Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் தலைநகரில் குண்டு மழை! – போரை தொடங்கியது ரஷ்யா!

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (09:17 IST)
உக்ரைன் மீது ரஷ்யா அதிபர் புதின் போர் அறிவிப்பை வெளியிட்ட நிலையில் குண்டுகள் வீச தொடங்கியுள்ளது ரஷ்ய ராணுவம்.

உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உக்ரைன் எல்லையில் ராணுவத்தை குவித்து வருவதால் பரபரப்பு எழுந்தது.

தொடர்ந்து ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் குழு உக்ரைனின் டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்களை கைப்பற்றியிருந்தது. அந்த மாகாணங்களை சுதந்திரமானவையாக ரஷ்யா அறிவித்தது. ரஷ்யாவின் இந்த போர் முனைப்பு செயல்பாடுகள் குறித்து இன்று ஐ.நா குழு கூடி ஆலோசனை நடத்த தொடங்கியுள்ள நிலையில் அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.

இதனால் உக்ரைனின் கீவ், டோனஸ்க், ஒடேசா, கார்கிவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளது. திடீரென தொடங்கியுள்ள இந்த போர் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யாவின் இந்த தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் மற்றும் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் ரஷ்யாவை தாக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொன்ன விஜய்.. என்ன காரணம்?

சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி

விஷச்சாராய மரணம் குறித்து இந்தியா கூட்டணி பேசாதது ஏன்.? திமுக என்பதால் மௌனமா.? எல்.முருகன் கேள்வி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments