Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுக்கு ஒரு முடிவே இல்லையா..? மீண்டும் மீனவர்கள் கைது! – மக்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (08:47 IST)
வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் என கடற்கரையோரத்தை சேர்ந்த மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடிக்க செல்வதும் அவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

சமீபத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 45 மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது நாகப்பட்டிணத்தை சேர்ந்த 22 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் அனைவரும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்து மீனவர்களுடைய விசைப்படகுகளையும் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில் பெய்த மழையின் சாதனை.. முழு தகவல்கள்..!

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments