Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஷ்யாவின் கடன் தகுதி மதிப்பீடு குறைப்பு: இதன் விளைவு என்ன??

ரஷ்யாவின் கடன் தகுதி மதிப்பீடு குறைப்பு: இதன் விளைவு என்ன??
, புதன், 9 மார்ச் 2022 (12:25 IST)
ரஷ்யாவின் கடன் தகுதி மதிப்பீடு B என்ற நிலையில் இருந்து C என்ற நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளதாக தகவல். 

 
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 14 நாட்களுக்கும் மேலாக போர் தொடர்ந்து உள்ள நிலையில் உக்ரைனில் சில நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் மக்கள் பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் நாடி செல்கின்றனர். 
 
ஏற்கனவே பல்வேறு தடைகள் ரஷ்யா மீது விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ரஷ்யாவிற்கான கடன் தகுதி மதிப்பீட்டை சர்வதேச நிறுவனமான ஃபிட்ச் குறைத்துள்ளது. ஆம், ரஷ்யாவின் கடன் தகுதி மதிப்பீடு B என்ற நிலையில் இருந்து C என்ற நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
அதாவது, ரஷ்யா தான் வாங்கும் கடனை திரும்பக் கட்டும் தகுதியை மேலும் இழந்துவிட்டது. இதன் காரணமாக ரஷ்யாவிற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் கடன் தரத் தயங்கும் நிலை ஏற்படும். மேலும் ரஷ்யாவின் கடன் தகுதி மதிப்பீடு C என்ற நிலையில் இருந்து மேலும் ஒரு படி குறைக்கப்பட்டால் அந்நாடு கடன் பெறும் தகுதியை முற்றிலும் இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடிந்தது கொரோனா 3வது அலை, 4 ஆம் அலைக்கு வாய்ப்பே இல்லை!