Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனின் ஆயுத கிடங்குகள் அழிப்பு! – டான்பாஸை கைப்பற்றிய ரஷ்யா!

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (08:29 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து வரும் நிலையில் உக்ரைனின் முக்கிய நகரமான டான்பாஸை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 3 மாத காலத்திற்கு மேல் போர் நடத்தி வரும் நிலையில் பல நாடுகளும் இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உலக நாடுகள் பல உக்ரைனுக்கு ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன.

அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் அளித்த ஆயுதங்களை உக்ரைன் ராணுவம் டான்பாஸில் உள்ள கிடங்கில் பாதுகாத்து வந்தது. இந்நிலையில் சமீப காலமாக டான்பாஸ் மீது படையெடுத்து வரும் ரஷ்யா அங்கு பல்வேறு பகுதிகளை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் தற்போது டான்பாஸ் ஆயுத கிடங்கை முழுவதுமாக அழித்து விட்டதாக ரஷ்யா கூறியுள்ளது. மேற்கு நாடுகள் வழங்கிய ஆயுதங்களை ரஷ்யா அழித்திருந்தால் இது உக்ரைனுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4வது மனைவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த கணவர்.. பெங்களூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொள்ளுங்கள்: சசிகாந்துக்கு ராகுல் காந்தி அறிவுரை..!

இந்திய தாயின் வீரம் நிறைந்த மகன்.. பூலித்தேவர் குறித்து ஆளுனர் ரவி பெருமிதம்..!

இந்தியா, ரஷ்யா இருதரப்பு பேச்சுவார்த்தை.. ஒரே காரில் சென்ற மோடி - புதின்..!

பாகிஸ்தான் பிரதமர் பகல்காம் தீவிரவாத தாக்குதலை பிரதமர் மோடி.. சீனாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments