Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமா மெளனம் கலைக்குமா? Cannes விழாவில் உக்ரைன் அதிபர்!!

Advertiesment
சினிமா மெளனம் கலைக்குமா? Cannes விழாவில் உக்ரைன் அதிபர்!!
, புதன், 18 மே 2022 (10:54 IST)
கேன்ஸ் திரைப்படத்தின் தொடக்க விழாவில் ரஷிய போர் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசும் வீடியோ ஒளிபரப்பபட்டது. 

 
கேன்ஸ் விழாவில் இந்திய பிரபலங்கள்: 
பிரான்சில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா உலக அளவில் பிரபலமாக உள்ளது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த ஆண்டு கேன்ஸ் 75வது சர்வதேச திரைப்பட கொண்டாடப்படுகிறது. 
 
இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் போர் என்பதை கருப்பொருளாக கொண்டு திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இந்த விழாவில் இந்தியாவில் இருந்து மாதவன் இயக்கிய ராக்கெட்ரி, பார்த்திபனின் இரவின் நிழல், ஏ.ஆர்.ரகுமானின் லெ மஸ்க் உள்ளிட்ட பல படங்கள் திரையிடப்படுகின்றன.
 
இந்த விழாவில் இன்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் திரைப்பிரபலங்கள் ஏ.ஆர்.ரகுமான், தீபிகா படுகோன், கமல்ஹாசன், தமன்னா, பூஜா ஹெட்டே உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். இந்த சர்வதேச விழாவின் எட்டு உறுப்பினர்களை கொண்ட நடுவர் குழுவில் தீபிகா படுகோனே ஒரு நடுவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
webdunia
ரஷ்யா - உக்ரைன் போர் குறித்த வீடியோ: 
இந்நிலையில் கேன்ஸ் திரைப்படத்தின் தொடக்க விழாவில் ரஷிய போர் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசும் வீடியோ ஒளிபரப்பபட்டது. முன்னதாக ஆஸ்கர் விருது விழாவிலும் ரஷ்யா - உக்ரைன் போர் குறித்த வீடியோ ஒளிபரப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது, 
 
உக்ரைனில் தினம் தினம் நூற்றுக்கணக்கான மக்கள் மடிகின்றனர். இவற்றை பார்த்துகொண்டு சினிமா அமைதியாக இருக்குமா? அல்லது உரக்க பேசுமா? 2வது உலகப்போரில் ஹிட்லர் செய்த கொடூரங்களுக்கு எதிராக சார்லி சாப்ளின் தைரியமாக டிக்டேட்டர் என்ற படத்தை வெளியிட்டார். அது ஹிட்லரின் போரை கிண்டல் செய்து எடுக்கப்பட்டது.
 
சாப்ளின் உண்மையான சர்வாதிகாரியை அழிக்கவில்லை. ஆனால் சினிமா மெளனம் காக்காமல் சத்தமாக பேசியது. சினிமா ஊமை இல்லை என்பதை நிரூபிக்க புதிய சார்லி சாப்ளின் தேவைப்படுகிறது என பேசியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

CEO பராக் அகர்வால் vs எலான் மஸ்க் - கருத்து மோதலால் தள்ளாடும் டிவிட்டர்!