அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளார்.
ஏழு இஸ்லாம் நாடுகளை சேர்ந்த மக்களை அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளார் டிரம்ப். இதனால், உலக அளவில் தொழில் செய்து வரும் நிறுவனங்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும்.
வெளிநாடுகளை சேர்ந்த பல நிறுவனங்கள் அமெரிக்காவில் செயல்பட்டு வருகின்றன. தொழில் ரீதியாக அமெரிக்காவிற்கு நுழைய முடியாமல் இஸ்லாம் நாட்டு தொழிலதிபர்கள் உள்ளனர்.
இவரது இந்த நடவடிக்கைகளுக்கு சொந்த கட்சியான குடியரசு கட்சி தலைவர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், வாஷிங்டனிலும், நியூயார்க்கிலும் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சகம், நீதிபதிகள், உள்துறை அமைப்புகளிடம் என யாரிடமும் ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக டிரம்ப் எடுத்துள்ள இந்த முடிவால், உலக நாடுகள் அமெரிக்காவை எதிர்க்கும் நிலை உருவாகியுள்ளது.
இது மட்டும் அல்லாமல் மூன்றாம் உலகப்போர் ஏற்படும் நிலைமை தொலைவில் இல்லை என கருதுகின்றனர்.