Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வூகான் சந்தையா? ஆய்வகமா? கொரோனா பரவியது எங்கிருந்து? – ஆய்வில் கண்டுபிடிப்பு!

வூகான் சந்தையா? ஆய்வகமா? கொரோனா பரவியது எங்கிருந்து? – ஆய்வில் கண்டுபிடிப்பு!
, செவ்வாய், 1 மார்ச் 2022 (11:34 IST)
கொரோனா பரவல் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதன் தோற்றம் குறித்து தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2019 இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் வூகானில் உள்ள ஹூனான் மார்க்கெட்டிலிருந்து பரவியதாக கூறப்படுகிறத். வௌவ்வாலில் இருந்து வேறொறு பாலூட்டி விலங்கு வழியாக இந்த வைரஸ் மனிதர்களை வந்தடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதேசமயம் மற்றொரு தரப்பு இது வூகானில் உள்ள ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரஸ் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு ஆய்வு மேற்கொண்டது.

இந்நிலையில், விஞ்ஞானிகள் சிலர் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்று 3 ஆய்வுகளை நடத்தினர். அவற்றின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அவற்றில் 2 ஆய்வுகளில், உகான் நகரில் உயிருடன் பாலூட்டி ரக விலங்குகளை விற்கும் ஹூனான் மொத்த மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா பரவியதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். மரபணு பகுப்பாய்வு மூலம் இதை கண்டறிந்து, அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளனர். எனினும் சில விஞ்ஞானிகள் இந்த ஆய்வு முடிவுகளை ஏற்காமலும் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரைனுக்கு 70 போர் விமானங்கள் வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்! – ரஷ்யா அதிர்ச்சி