Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாக்குதல் நடந்த இடத்தில் செய்தியாளர்கள்: பதிலடி உறுதி என பாகிஸ்தான் அமைச்சர் தகவல்

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (06:36 IST)
நேற்று அதிகாலை இந்திய விமானப்படை பாகிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்து 12 இடத்தில் அதிரடியாக தாக்கி தீவிரவாதிகளின் முகாம்களை அழித்தது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளிடம் இருந்து இந்தியாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
இந்த நிலையில் இந்தியா தாக்குதல் நடத்திய இடத்திற்கு செய்தியாளர்கள் அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் இந்த தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் இருக்கும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹமூத் குரோஷி கூறியுள்ளார்.
 
இந்தியாவுக்கு எப்போது, எங்கே பதிலடி கொடுப்பது என்பது குறித்து பாகிஸ்தான் விரைவில் முடிவு செய்யும் என்றும், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும், இதற்காகவே நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹமூத் குரோஷி மேலும் தெரிவித்தார்.
 
மேலும் தாக்குதல் நடந்த இடத்திற்கு பாகிஸ்தான் செய்தியாளர்கள் மட்டுமின்றி இந்தியா உள்பட சர்வதேச செய்தியாளர்களையும் அழைத்து செல்ல வேண்டும் என்றும் அப்போதுதான் தாக்குதல் நடந்த இடத்தில் தீவிரவாதிகளின் முகாம்கள் இருந்ததா? என்பது குறித்து தெரிய வரும் என்றும் சர்வதேச செய்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments